வளர்க தமிழ்..
வாழ்க தமிழினம்..
இறைவனால் பஞ்ச பூதங்களையும் உட்புகுத்தித் தம் வடிவத்திலேயே படைக்கப் பட்டு இந்தப் பூவுலகில் தவழ விடப் பட்ட நம்மிற் பலர் நெடுங் காலம் நலமுடன் வாழ முடியாமற் போவது ஏனோ? பரம்பரையாக வரும் மரபணுக் குறைகளா? வேதியற் குறைகளா?கருவாகத் தாயினுள் இருக்கும் போதோ, தாயின் உடலின் உள்ளிருந்து வெளியுலகினுள் வரும் பிறப்பு எனும் பிரசவப் போக்கிலோ நிகழும் தவறுகள், இடர்கள், நஞ்சுகள், மருந்துகள், விபத்துகள், காலந் தாழ்த்துதல் போன்றவையா?

பிறந்த பின் பசலை – பச்சைக் குழந்தைப் பருவத்திலோ, பின்னர் வளரும் போக்கிலோ நிகழும் தவறுகள், இடர்கள், நஞ்சுகள், மருந்துகள், விபத்துகள், காலந் தாழ்த்துதல் போன்றவையா?

இவற்றைத் தவிர்த்தும், முறைப்படி சரி  செய்தும் இந்த அப்பாவிப் பிஞ்சு – குஞ்சுகளுக்கு நலம் அளித்தால் அவர்களின் பொக்கை வாய் மழலைச் சிரிப்பில் இறைவனையே காண முடியுமே!

அந்த அப்பாவிப் பிஞ்சு – குஞ்சுகள் தாம் நலமுடன் வாழ முடியாதிருப்பதோடு, அவர்களின் பெற்றோரும், தாத்தா – பாட்டியரும், உற்றாரும், மற்றோரும் மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல், நலம் பெறவே வழியற்றுத் துடி துடித்துக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தைகளைக் கொல்லவும் – கருணைக் கொலை செய்யவும் – முடியாமல் இருண்டு கிடக்கும் அவர்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நன்னம்பிக்கை எனும் ஒளி விளக்கை ஏற்றலாமே!”

Advertisements

About Loga muthu krishnan

I am a 70 year old Neurosurgeon just started Non-Profit blogs under WordPress, Google Bloggerspot, webs.com, Facebook, http://logamuthu.tumblr.com/etc., entitled "Positive Health For All" disseminating useful health information free of cost over the internet(Absolutely NO promotions of persons (including me), brands, hospitals, books etc.,). My blogs are:https://krishnanlogamuthu.wordpress.com/, http://gtieve.blogspot.com, http://logamuthu.webs.com/ http://logamuthu.tumblr.com/ http://www.facebook.com/logumuthu.krishnan

One response »

  1. Good effort in Tamil Language1 Thanq WordPress.com for this!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s